
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார். அவருக்கு வயது 69.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
விக்ரம், சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படத்தைத் தயாரித்த வி.ஏ.துரை, தமிழ் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் நடிப்பில் பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். கஜேந்திரா, என்னம்மா கண்ணு உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் தயாரித்த படங்கள். நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படத்தில் தயாரிப்புப் பணிகளிலும் பெரும் பங்கு வகித்தவர்.
விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு!
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த வி.ஏ.துரை, அண்மையில் திரைத்துறையினரிடம் உதவிக்கோரி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சூர்யா, ராகவா லாரன்ஸ், கருணாஸ் போன்ற நடிகர்கள், அவரது சிகிச்சைக்காக உதவிய நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்த படியே சிகிச்சைப் பெற்று வந்த வி.ஏ.துரை சிகிச்சைப் பலனின்றி காலமானார்.