
கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமக்கு கடன் கொடுக்கவில்லை என ஒருவர் வேதனையுடன் முறையிட்டதை அடுத்து, அவரை மேடைக்கு அழைத்து அவரது குறைகளைக் கேட்டறிந்தார்.

தடுப்பைத் தாண்டி சாலையில் புகுந்த சரக்கு ரயில்!
கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் மாபெரும் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொழில் முனைவோர் சதீஸ் என்பவர் தனக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். மத்திய அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறிது நேரம் கூச்சலிட்டு, அழைத்து பார்த்தார்.
அங்கு இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், அவரை முன்பக்கமாக அழைத்துச் சென்றனர். பத்திரிகையாளரிடம் அவர் பேச முற்பட்ட போது, வங்கி ஊழியர்களும் பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலரும் பேசவிடாமல் இழுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இவற்றை மேடையில் இருந்து கவனித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், வேதனை தெரிவித்த நபரை மேடைக்கு அழைத்து தன்னுடைய குறைகளைத் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.
ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்!
இதையடுத்து, மேடை ஏறி தனது கோரிக்கைகளை அவர் கூறியுள்ளார். கடன் உதவிக்கான ஆவணங்களை முறையாகக் கொண்டு வந்து சமர்பிக்குமாறும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேடையிலேயே மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.