
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (அக்.09) காலை 10.00 மணிக்கு சட்டப்பேரவைச் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

“ஹேலோ சுற்றுப்பாதையை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றி”- இஸ்ரோ தகவல்!
அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாள் என்பதால், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது, சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள் ஆண்டமுத்து, கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!
அதைத் தொடர்ந்து, அத்திக்கடவு- அவிநாசி திட்டம் குறித்து அ.தி.மு.க. உறுப்பினர் செங்கோட்டையனின் கேள்விக்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காலிங்கராயர் அணையில் இருந்து தண்ணீர் வந்தவுடன் அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடங்கப்படும்” என்றார்.