அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் நாளில் 30 கோடி ரூபாய் வசூலாகும் என்று எதிர்பார்ப்பு.
அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வசூல் சாதனை அடைந்தது. 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான அந்தபடம், ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.

வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை படம் அஜித்தின் பைக் ரேசிங்கை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்தது.
தற்போது வினோத் போனி கபூர், அஜித் கூட்டணியில் வெளிவர உள்ளது துணிவு படம். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் யூ டியூபில் வெளியாகி பல சாதனைகளை செய்தது.
தற்பொழுது படம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பிற்கு முன்னரே வெளிநாடுகளில் நல்ல பிரீ புக்கிங் நடந்ததாக கூறப்படுகிறு. தற்போது தமிழகத்திலும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளை துணிவு படம் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த விபரம் மற்றும் புக்கிங் போன்ற விவரங்களை வைத்து கணித்து பார்க்கும் பொழுது படம் முதல் நாள் முடிவில் ரூபாய் 30 கோடி வரை வசூலாகலாம் என்று படக்குழுவினர் எதிர்பார்கின்றனர்.
ஆனால் இந்த ஆண்டு விஜய்யின் வாரிசு படமும் அதே தேதியில் வெளியாகி போட்டிக்கு வருகிறது. இவர்களின் கணிப்பு நிஜமாகுமா? அல்லது பொய்த்து போகுமா என்பதை ஜனவரி 11ஆம் தேதி தெரிந்துவிடும்.