
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 230 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

2024- ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 29வது போட்டி, லக்னோவில் உள்ள பாரத் ரத்னா அடல் பிஹாரி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.29) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்க்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
இதையடுத்து, பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 87 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களையும், கே.எல்.ராகுல் 39 ரன்களையும் எடுத்தனர்.
அதேபோல், இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3, க்ரிஸ்வோக்ஸ், அடில ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!
அதைத் தொடர்ந்து, 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.