
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 18,000 ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார். இந்த மைல் கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா.

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 29வது போட்டி, லக்னோவில் உள்ள பாரத் ரத்னா அடல் பிஹாரி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.29) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்க்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சுப்மன் கில் 9 ரன்களிலும், விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், பொறுப்புடன் விளையாடிய ரோஹித் சர்மா, அரைசதம் கடந்து அசத்தினார். அணியின் கேப்டனாக 100வது போட்டியில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா, இந்தாண்டில் 1,000 ரன்களைக் கடந்து சாதனைப் புரிந்துள்ளார்.
குண்டு வெடித்த இடத்தில் என்.ஐ.ஏ. ஆய்வு!
ரோஹித் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், முன்னாள் வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.