spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகுண்டு வெடித்த இடத்தில் என்.ஐ.ஏ. ஆய்வு!

குண்டு வெடித்த இடத்தில் என்.ஐ.ஏ. ஆய்வு!

-

- Advertisement -

 

சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் கைது!
Photo: NIA

கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ மத கூட்டரங்கில் மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அடுத்தடுத்து வெடித்த குண்டுவெடிப்பில் சுமார் 30- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

we-r-hiring

கேரளாவில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி!

குண்டு வெடிப்பில் படுகாயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 27- ஆம் தேதி தொடங்கிய மூன்று நாட்கள் கூட்டத்தில் 2,000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

மத வழிபாட்டு அரங்கில் குண்டு வெடிப்பு நடந்தது எப்படி? என கேரளா மாநில காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா குண்டு வெடிப்பில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. விடுமுறையில் உள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறும் கேரளா மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், களமச்சேரி, எர்ணாகுளம், கோட்டயம் மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘அயோத்தி ராமர்கோயில்’- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

இந்த நிலையில், குண்டு வெடித்த பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள், நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அத்துடன், குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது, நிகழ்விடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, குண்டுவெடிப்பு நடந்த இடம் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கேரள மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.

MUST READ