spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டம்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டம்!

-

- Advertisement -

 

கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தால்.... அரசின் முன்னுள்ள வாய்ப்புகள்!
File Photo

உடல்நலக்குறைவால் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

we-r-hiring

உலகக்கோப்பைப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த முகமது ஷமி!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். புழல் சிறையில் உள்ள அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கூடுதல் சிகிச்சைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அவ்வப்போது கால் மறத்துப் போவதாக கூறப்படுகிறது. அதனால் சிறப்பு இதயவியல் மருத்துவர் தலைமையிலான மருத்துவக் குழு செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்தது.

உலகக்கோப்பை 2ஆவது அரையிறுதிப் போட்டி- தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்!

அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

MUST READ