Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக ஆளுநரைச் சந்தித்துப் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்!

தமிழக ஆளுநரைச் சந்தித்துப் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்!

-

- Advertisement -

 

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்துப் பேசினார். நட்பு ரீதியிலாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஆளுநர் மாளிகையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

“ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போல விளையாடினோம்”- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

தற்போது ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் 2019- ஆம் ஆண்டு வரை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அஜித் தோவல் இருவரும் கேரள கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இணைந்து பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர்.

உலகக்கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இடம் பெற உள்ள சுவாரசிய நிகழ்ச்சிகள் என்னென்ன தெரியுமா?

இந்த நிலையில், வெளியூர் செல்லும் வழியில் சென்னைக்கு வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெள்ளிக்கிழமை இரவு ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். இந்த சந்திப்பின் போது, தமிழக கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த சந்திப்பு நட்பு ரீதியிலானது என்பது ஆளுநர் மாளிகையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

MUST READ