Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியாவில் முதன்முறையாக ரோபோடிக் இதய துவார அறுவை சிகிச்சை - மா.சுப்பிரமணியன் பாராட்டு

இந்தியாவில் முதன்முறையாக ரோபோடிக் இதய துவார அறுவை சிகிச்சை – மா.சுப்பிரமணியன் பாராட்டு

-

- Advertisement -

இந்தியாவில் முதன்முறையாக ரோபோடிக் மூலம் சிறுமிக்கு இதய துவார அறுவை சிகிச்சை செய்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது. ரோபோடிக் உதவியுடன் 362 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.இந்தியாவில் முதன்முறையாக ரோபோடிக் இதய துவார அறுவை சிகிச்சை - மா.சுப்பிரமணியன் பாராட்டுஇந்தியாவிலேயே முதன் முறையாக மத்திய அரசு மருத்துவமனைகளில் கூட இல்லாத மாநில அரசு மருத்துவமனைகளில் அதிலும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அசிஸ்டன்ஸ் சர்ஜரி மூலமாக முதன்முறையாக இதய துவார அறுவை சிகிச்சை என்பது பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சாதனை புரிந்த மருத்துவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து பாராட்டு தெரிவித்தார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் மருத்துவத்துறையில் மிக சிறந்த மாநிலமாக இந்தியாவில் மிகப்பெரிய சாதனைகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. முதியோர்களுக்கான சிகிச்சை குறித்து பயிற்சியாளர்களுக்கான பயிற்சி என்ற அடிப்படையில் 17 மாநிலங்களில் இருந்து, மருத்துவர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்றுள்ளனர். குஜராத்தில் இருந்து வந்த மருத்துவர்கள் தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை வந்து பார்த்து பாராட்டியுள்ளனர்.

மேகாலையைச் சேர்ந்த முப்பதுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் தமிழகத்தில் வந்து பயிற்சி பெற்று சென்றுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து பயிற்சி பெறும் வகையில் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பாக செயல்படுகிறது.மாண்புமிகு தமிழக முதல்வர் 2022-ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி 34.5 கோடி மதிப்பில் இந்தியாவில் முதல் ரோபோடிக் கேன்சர் எக்யூப்மெண்டை கொண்டு வந்தோம்.

இந்திய மத்திய மாநில அரசு மருத்துவமனைகளில் இல்லாத கருவி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வாங்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் ஜிப்மர் மருத்துவமனைகள் தாண்டி இந்த கருவி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இதன் மூலம் இருதயம் புற்றுநோய் தைராய்டு என 362 சிகிச்சைகளை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவத்தை தனியார் மருத்துவமனையில் பார்க்க 8 முதல் 10 லட்சமாகும்.

ஆனால், 1 ரூபாய் இல்லாமால் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்ற அனைவரும் நலமாக இருக்கின்றனர். இந்த மாதம் 3 ஆம் தேதி இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் முதல் முறையாக ரோபோட்டிக் உதவியுடன் இதய துவார அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். மேடவாக்கத்தைச் சேர்ந்த 16  வயது மாணவி அஸ்வினிக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.

அந்த மாணவிக்கு இதயத்தில் இருந்த ஓட்டை ரோபோட்டிக் உதவியுடன் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்து பல நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். தழும்புகள் நீண்ட நாட்கள் இருக்கும். மிகச் சிறிய தழும்போடு ரோபோடிக் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை 18 முதல் 25 லட்சம் வரை தனியாரில் உள்ள மருத்துவமனைகளில் செலவாகும். காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக இந்த சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. டாவின்சி எக்ஸ் ஐ என்ற கருவி மூலம் ரோபோட்டிக் அசிஸ்டன்ட் சர்ஜரி செய்யப்பட்டு நோயாளிகள் பயனடைந்து இருக்கிறார்கள். தருவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு மருத்துவத் துறை சார்பில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து, அறுவை சிகிச்சை மேற்கொண்ட இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் மீனாட்சி சுந்தரம், மற்றும் மயக்கியவியல் துறை தலைவர் மருத்துவர் குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இந்தியாவில் முதன்முறையாக மருத்துவர்கள் ரோம்பாட்டிக்கு உதவியுடன் இதய துவார அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் மிகவும் துல்லியமாக பக்கவிளைவுகள் ஏற்படாத வகையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோபோடிக் மூலமாக பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இதே துவார அறுவை சிகிச்சை முதல் முறையாக சிறுமிக்கு செய்யப்பட்டு சாதனைப்படுத்துள்ளதாக மீனாட்சி சுந்தரம் – இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர். குமார் – மயக்கவியல் துறை மருத்துவர் ஆகியோா் தெரிவித்தனா்.

ஆலந்தூரில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், ஒரு நாள் விளையாடும் பொழுது மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு சென்றதாகவும், அப்பொழுது என்னை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தின் ஓட்டை இருப்பதாக கூறினார்கள் அதனை கேட்டு அதிர்ந்து போன எனது தாய் எவ்வளவு செலவாகும் என்று கேட்ட பொழுது பல லட்சம் ரூபாய் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியதால், நாங்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவம் பார்த்ததாகவும் மருத்துவர்களால் இன்று வெற்றிகரமாக சிகிச்சை செய்யப்பட்டு, நான் இன்று நலமாக உள்ளேன் முதலமைச்சர் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு மாணவி தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டார். அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சிறுமி அஸ்வினி தெரிவித்துள்ளாா்.

நான் டிபன் கடை நடத்தி வருவதாகவும், கடந்த மூன்று மாதங்களாக என்னுடைய பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை அதனால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அங்கு பல லட்சம் ரூபாய் ஆகும் என்று கூறியதால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். இங்கு அஸ்வினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

பிறகு, முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் என்னுடைய பிள்ளைக்கு இலவசமாக இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமாக இருக்கிறார். இதற்கு காரணமாக உள்ள முதலமைச்சர் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு என்னுடைய நன்றிகள் என சிறுமியின் தாய் கூறியுள்ளாா்.

ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பணம் – காவல் நிலையத்தில் ஒப்படைத்த கொத்தனார்

MUST READ