Homeசெய்திகள்சென்னைரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பணம் - காவல் நிலையத்தில் ஒப்படைத்த கொத்தனார்

ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பணம் – காவல் நிலையத்தில் ஒப்படைத்த கொத்தனார்

-

- Advertisement -

சாலையில் கிடந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவர் கையில் கொடுத்த கொத்தனார் வேலை செய்துவரும் நபருக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனா்.ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பணம் - காவல் நிலையத்தில் ஒப்படைத்த கொத்தனார்சென்னை புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்த உமாபதி (54) என்ற நபர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு நங்கநல்லூர், பாலாஜி நகர் வழியாக வந்து கொண்டிருந்தபோது கீழே ஒரு பை கிடந்துள்ளது. அதனை எடுத்து பார்த்த போது அதில் ரூபாய் இரண்டு லட்சத்து 5 ஆயிரம் பணம் மற்றும் தனியார் வங்கி காசோலை புத்தகம் ஆகிய இருந்துள்ளது.

இதனையடுத்து, தனது மகள் கற்பகவல்லி என்பவரோடு மடிப்பாக்கம் காவல் நிலையம் சென்று அதனை ஒப்படைத்தார். காசோலையிலிருந்த செல்போன் நம்பருக்கு போன் செய்த போலீசார் அவரை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்ட போது நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகா மீனாட்சி என்பவருடைய பணம் என்பது தெரியவந்தது.

பணத்தை மருத்துவர் கார்த்திகா மீனாட்சி என்பவரிடம் ஒப்படைத்த போலீசார், கொத்தனார் வேலை செய்து வரும் உமாபதி என்ற நபரை சால்வை அணிவித்து பாராட்டினர்.

ஒரு தீவிரவாதி ஊடுருவிவிட்டான் என்று சொல்வதே தோல்வி – சீமான் பேட்டி

 

MUST READ