spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

- Advertisement -

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று (நவ.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

‘சீனு ராமசாமி உண்மையை பேசுங்கள்’….. சர்ச்சையை கிளப்பிய மனுஷாவின் பதிவு!

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் நவம்பர் 27- ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும், இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 29- ஆம் தேதி வாக்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (நவ.24) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தயாரிப்பாளராக உருவெடுத்த குத்து பட நாயகி…. எக்ஸ் பக்கத்தில் நெகழ்ச்சி பதிவு!

நவம்பர் 25- ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.” இவ்வரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ