
சென்னையில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், போரூர், கோட்டூர்புரம், தியாகராயர் நகர், மேற்கு மாம்பலம், மயிலாப்பூர், எழும்பூர், ஈக்காட்டுத்தாங்கல், பம்மல், வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் உள்ளிட்டப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று (நவ.25) காலை 10.00 மணி வரை கனமழை நீடிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிப்பான பாதுஷா செய்வது எப்படி?
தொடர் கனமழை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று (நவ.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.