spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆலியா பட்டையும் விட்டு வைக்காத டீப் ஃபேக் கும்பல்... பதறும் பாலிவுட்....

ஆலியா பட்டையும் விட்டு வைக்காத டீப் ஃபேக் கும்பல்… பதறும் பாலிவுட்….

-

- Advertisement -
தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு மட்டுமன்றி தற்போது இந்தியிலும் அனிமல் உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக சின்மயின் கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கும் படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனிடையே, டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் நடிகை ராஷ்மிகாவை தவறாக சித்தரித்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உண்மையில் இருப்பவர் ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் வாழ் இந்தியப் பெண். இவருடைய வீடியோவை ராஷ்மிகா மந்தனா போல டீப் பேக் முறையில் மாற்றி சமுக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதற்கு வேதனை தெரிவித்து ராஷ்மிகா இணையத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமன்றி பாடகி சின்மயி உள்பட கோலிவுட் நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்தனர். மேலும், டெல்லி போலீசாரும் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில், டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் பிரபல பாலிவுட் நடிகை ஆலிபா பட்டும் பாதிக்கப்பட்டுள்ளார். ராஷ்மிகா மற்றும் கஜோலைத் தொடர்ந்து ஆலியா பட்டின் புகைப்படத்தையும் படு மோசமாக சித்தரித்துள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்புகள் சமூக வலைதளங்களில் கிளம்பி வருகின்றன.

MUST READ