spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

-

- Advertisement -

 

சென்னையில் 10 மணி வரை மழை தொடரும்!
File Photo

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது; காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை மறுநாள் (நவ.29) புயலாக மாறும். புதிய புயலுக்கு மியான்மரால் பரிந்துரைக்கப்பட்ட ‘Michaung’ என்ற பெயர் வைக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.

we-r-hiring

சளி, இருமலுக்கு மருந்தாகும் தூதுவளை துவையல்!

தமிழகத்தில் வரும் நவம்பர் 29- ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அந்தமானை ஒட்டிய கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால், அந்த கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

MUST READ