Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சளி, இருமலுக்கு மருந்தாகும் தூதுவளை துவையல்!

சளி, இருமலுக்கு மருந்தாகும் தூதுவளை துவையல்!

-

- Advertisement -

தூதுவளையானது நிறைய மருத்துவ குணங்களை கொண்டிருக்கின்றன. தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இவை இருமல், சளி மட்டுமல்லாமல் வாதம், பித்தம், இளைப்பு,மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, கண் குறைபாடுகள் ஆஸ்துமா பிரச்சனை போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

தற்போது தூதுவளை துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.சளி, இருமலுக்கு மருந்தாகும் தூதுவளை துவையல்!

தேவையான பொருட்கள்:

தூதுவளை இலை – 200 கிராம்
புதினா – ஒரு கட்டு
கொத்தமல்லி – ஒரு கட்டு
உளுந்து – 50 கிராம்
மிளகாய் வற்றல் – 5
பெருங்காயம் – சிறிதளவு
பூண்டு – 10 பல்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

தூதுவளை துவையல் செய்வதற்கு முதலில் ஒரு கடாயில், பெருங்காயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு வறுக்க வேண்டும். அத்துடன் உளுந்து சேர்த்து வறுக்க வேண்டும்.

அதன் பின் இவற்றுடன் தூதுவளை இலை, கொத்தமல்லி இலை, புதினா இலை ஆகியவற்றின் இலைகளை கில்லி அதனை வறுத்து கொள்ள வேண்டும்.

பின் வறுத்த அனைத்தையும் தண்ணீர் தெளித்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் கடாயில் நெய் சேர்த்து கடுகு, உளுந்து பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.சளி, இருமலுக்கு மருந்தாகும் தூதுவளை துவையல்!

தாளித்ததை துவையலில் சேர்த்து கலக்க வேண்டும்.

இந்தத் துவையலை சளி, ஆஸ்துமா நோய், கபம் உள்ளவர்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் குணமடையலாம்.

MUST READ