
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் தனது 100-வது டி20 போட்டியில் சதம் விளாசியதுடன் பல்வேறு சாதனைகளையும் பதிவுச் செய்துள்ளார்.

தஞ்சையில் வீடு புகுந்து செயின் பறிப்பு.. மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு..
மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 223 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில், கிளென் மேக்ஸ்வெல் 104 ரன்கள் விளாசி, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 47 பந்துகளில் அவர் சதம் விளாசினார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக சதம் விளாசிய, ஆஸ்திரேலிய அணி வீரர் என்ற சாதனையை ஆரோன் பின்ச் மற்றும் ஜாஸ் இங்லிஸ் உடன் பகிர்ந்து கொண்டார். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவின் சாதனையை, மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார். இருவரும் நான்கு சதங்கள் விளாசி உள்ளனர்.
சென்னையில் தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்!
சேசிங்கில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமையையும் மேக்ஸ்வெல் சொந்தமாக்கியுள்ளார். டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அதிக சிக்ஸர்களைப் பறக்கவிட்ட வீரராகவும் மேக்ஸ்வெல் உள்ளார். அவர் 37 சிக்ஸர்களை விலகியுள்ளார்.