spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

- Advertisement -

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (நவ.29) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

திருமணத்திற்கு தேவையான நகைகளாகப் பார்த்துக் கொள்ளை!

வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை (நவ.30) வலுப்பெறும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று (நவ.29) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (நவ.30) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

“விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை”- மருத்துவமனை அறிக்கை!

வரும் டிசம்பர் 01- ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 02, 03 ஆகிய நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ