spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

-

- Advertisement -

 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!
Video Crop Image

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

we-r-hiring

லியோ சம்பள பாக்கி விவகாரம்…..லோகேஷின் அதிரடி முடிவு!

அதன்படி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி வீராணம், தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மொத்தம் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 20.31 அடிக்கு நீர் இருப்பு உள்ளது; ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 389 கனஅடியாக உள்ளது. மொத்தம் 24 அடி கொள்ளளவுக் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 22.53 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மொத்தம் 18.86 அடி கொள்ளளவுக் கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 17.64 அடியாக உள்ள நிலையில், ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 395 கனஅடியாக உள்ளது. மொத்தம் 35 அடி கொள்ளளவுக் கொண்ட பூண்டி ஏரியில் 31.40 அடியாக நீர் இருப்பு உள்ள நிலையில், நீர்வரத்து வினாடிக்கு 920 கனஅடியாக உள்ளது. 15.60 அடி கொள்ளளவுக் கொண்ட வீராணம் ஏரியில் 13.65 அடியாக நீர்மட்டம் உள்ள நிலையில், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 249 கனஅடியாக உள்ளது.

கே.ஜி.எஃப் வேற… சலார் வேற… பிரசாந்த் நீல் கொடுத்த அப்டேட்!

மொத்தம் 36.61 அடி உயரம் கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் 35.62 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது

MUST READ