spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கடுக்காயின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!

கடுக்காயின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!

-

- Advertisement -

கடுக்காயின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!கடுக்காய் என்பது வாய், தொண்டை, இரைப்பை, குடல் ஆகியவற்றில் உள்ள ரணங்களை ஆற்றும் வலிமை பெற்றது. மலச்சிக்கலை குணப்படுத்தி குடல் சக்தியை ஊக்கப்படுத்துகிறது. வாதம் பித்தம் கபம் ஆகியவற்றால் ஏற்படும் ஏராளமான நோய்களை குணப்படுத்துகிறது. பசியை தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பயன்படுகிறது.

மேலும் கடுக்காயானது, கை கால் நமைச்சல், மார்பு நோய், மூலம், வயிற்றுப் பொருமல், இருமல், கண் நோய் போன்றவர்களை குணப்படுத்தும். கடுக்காயில் உள்ள சதைப் பகுதியை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். விதை என்பது நச்சுத்தன்மை உடையதால் அதனை பயன்படுத்தக் கூடாது என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

we-r-hiring

கடுக்காயை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

1. காலையில் இஞ்சி, மதிய வேளையில் சுக்கு, மாலையில் கடுக்காய் என தொடர்ந்து 48 நாட்கள் இதனை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் முதிர்வின்றி இளமையாக வாழலாம்.

2. கடுக்காய் ஓடுகளை தூளாக்கி இரவு உணவு உண்டபின் அரை தேக்கரண்டி பொடியை சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வர உடல் வலிமை பெறும். வாதமும் குணமடையும்.

3. மூன்று கடுக்காய் தோல்களை எடுத்து தேவையான அளவு இஞ்சி, புளி, உளுத்தம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமானம் சீராக நடைபெற்று மலச்சிக்கல் தீரும்.கடுக்காயின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!

4. 15 கிராம் கடுக்காய் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் ஆரிய தண்ணீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.

இம்முறைகளை எல்லாம் ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு ஏதேனும் ஒவ்வாமை ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம் இல்லையெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

MUST READ