spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை.. சவரன் ரூ.47,000ஐ தாண்டியது..

வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை.. சவரன் ரூ.47,000ஐ தாண்டியது..

-

- Advertisement -
தங்கம் விலை
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ. 47,000 தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது..

தங்கம் எப்போதுமே பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. தங்கத்தில் ஆபரணங்கள் அணிந்து பார்க்கும் ஆசை ஒருபுறம் இருந்தாலும், தங்கத்தில் முதலீடு செய்வதை மிகப்பெரிய சேமிப்பாகவும் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி திருமணம், காதணி விழா என நமது கலாச்சார விசேஷங்கள் ஒவ்வொன்றிலும் தங்கம் முக்கிய இடம் பிடிக்கிறது. இதனால் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் நடுத்தரவர்கத்தினரை கலக்கமடையச் செய்கிறது. கடந்த மே மாதம் தான் தங்கம் விலை ரூ.46,000 என்கிற உச்சத்தை தொட்டது. அதன்பிறகு தொடர்ந்து விலை உயர்வதும், குறைவதுமாக அதே விலையைச் சுற்றியே நீடித்து வந்தது.

தங்கம் விலை

we-r-hiring

இந்த நிலையில் கடந்த 29ம் தேதி ( நவ) அன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு கிராம், 5,870 மற்றும் ஒரு சவரன் 46,960 ரூபாயை எட்டியது. இது 47,000 ரூபாய்க்கு வெறும் ரூ.40 தான் குறைவு. தொடர்ந்து நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.40ம், மாதத்தின் முதல் நாளான நேற்று (டிச.1) சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்தது. இது இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் தங்கம் விலை தொடர்ந்து உயரும் எனவும், ஒரு சவரன் ரூ.50,000ஐ தொடவும் வாய்ப்பிருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்து வந்தனர்.

அதற்கேற்ப சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் 47,280 ரூபாய் என்கிற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல் கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,915க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 83 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் இந்த வரலாறு காணாத விலையேற்றம் இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ