சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ்க்கு உயர் நீதிமன்றம் சார்பில் வழியனுப்பு விழா நடைபபெற்றது.
கடந்த ஒன்பதரை ஆண்டு பதவி காலத்தில் 69 ஆயிரம் வழக்குகளை நீதிபதி பிரகாஷ் முடித்து வைத்துள்ளார் என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.


மக்களால் பாதுகாக்கப்படும் சிறந்த அரசியலமைப்பு சட்டத்தை கொண்டிருக்கும் இந்தியாவில் நீதிபதியாக பணியாற்றியது பெருமைமிக்கது என நீதிபதி பி.என்.பிரகாஷ் பெருமிதம்.
ஓய்வுக்கு பின், சிறை கைதிகளுக்கு புத்தாக்க பயிற்சி அளிப்பது, ஏழை மாணவர்கள் தேர்வு தடைகளை தகர்த்தெறிய பயிற்றுவிக்க உள்ளதாக நீதிபதி பிரகாஷ் கூறினார்.
நீதிபதி பிரகாஷ் பணி ஓய்வின் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பதவிகளில், உள்ள பணியிடங்கள் 52 ஆக குறைகிறது. காலியிடங்கள் 23 ஆக அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.


