spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"சபரிமலை வரும் தமிழக பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்"- கேரளா அரசு உறுதி!

“சபரிமலை வரும் தமிழக பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்”- கேரளா அரசு உறுதி!

-

- Advertisement -

 

சபரிமலை பக்தர்கள் அதிர்ச்சி! பொன்னம்பல மேட்டில் பூஜை - சென்னையை சேர்ந்தவர் சிக்கினார்
சபரிமலை பக்தர்கள்

சபரிமலைக்கு வரும் தமிழக பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் வழங்கப்படும் என கேரள மாநில தலைமைச் செயலாளர் உறுதியளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

we-r-hiring

ரன்பீர் கபூர் நடிக்கும் இராமாயணம்…ராவணனாக களமிறங்கும் பான் இந்திய ஹீரோ…ஷூட்டிங் எபோது?

தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்பப் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் முறையாகக் கிடைப்பதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா மாநில அரசைக் கேட்டுக் கொண்டார்.

அதன் அடிப்படையில், கேரளா மாநில தலைமைச் செயலாளர் வேணுவை தொலைபேசி வாயிலாகத் தொடர்புக் கொண்டு பேசிய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு வலியுறுத்தினார்.

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் அயலான்…. தேதியை லாக் செய்த படக்குழு!

இந்த நிலையில், தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் தங்குவதற்கான அடிப்படை வசதிகளை செய்துக் கொடுக்கவும், பாதுகாப்பினை உறுதிச் செய்யவும் அரசு சார்பில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என கேரள தலைமைச் செயலாளர் வேணு உறுதியளித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

MUST READ