Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வரின் அறிவுறுத்தலால் போராட்டத்தை ஒத்திவைத்த சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வரின் அறிவுறுத்தலால் போராட்டத்தை ஒத்திவைத்த சு.வெங்கடேசன் எம்.பி.

-

- Advertisement -

பொங்கல் பண்டிகையன்று வங்கித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் கிளர்க் முதன்மை தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி வட்டார அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சு.வெங்கடேசனுக்கு ஆதரவு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னை தெற்கு தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை நீடித்த போராட்டம் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “பொங்கல் தினத்தன்று எஸ்.பி.ஐ.தேர்வு அறிவிக்கப்பட்டது நியாயம் அல்ல, எனவே தேர்வு தேதியை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். இது பல ஆயிரம் தமிழ் மாணவர்களின் தேர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. தமிழக மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனை. நேற்று மாலை 4 மணி அளவில் எஸ்பிஐ எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தேர்வு தள்ளி வைப்பதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்திருந்தது.

இந்தத் தேர்வை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து 13,000 பேர் தேர்வு எழுத உள்ளனர். ஆனால் வெறும் 2000, 3000 பேர் மட்டுமே எழுதப் போகின்றனர் என்று எஸ்பிஐ விளக்கம் அளித்து இருக்கிறது. இது பெரும் அநீதி. தேர்வு தேதியை ஒத்தி வைக்காமல் எங்களது போராட்டத்தை கைவிட மாட்டோம் உறுதியாக இருந்தோம். இந்தநிலையில் ஒன்றிய நிதி அமைச்சருடன் இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நிதிஅமைச்சர் காலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசிவிட்டு நல்ல முடிவை சொல்கிறேன்.

ஒன்றிய நிதி அமைச்சர் தேர்வு தகுதியை மாற்றுவார் என்று நம்புகிறோம். ஓணம் பண்டிகை, துர்கா பூஜை அன்று இது போன்ற தேர்வுகளை நடத்துவார்களா? தமிழர் திருநாள் என்று தெரிந்தும், மாணவர்களை தேர்வு எழுத வைப்பது எந்த வகையிலும் நியாயம்? எனவே தேர்வு தேதியே மாற்றி அமைக்கின்ற ஓர் நல்ல முடிவை நிதி அமைச்சர் அறிவிப்பார் என்ற ஒரு நம்பிக்கையோடு இந்த போராட்டத்தில் இருந்து தற்காலிகமாக விளக்கிக் கொள்கிறோம்” எனக் கூறினார்.

MUST READ