spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் இல்லை'- பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

‘ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் இல்லை’- பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

-

- Advertisement -

 

'ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் இல்லை'- பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

we-r-hiring

புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன்- பிரபு மகள் திருமணம்…. திரண்டு வந்து வாழ்த்திய திரைப்பட பிரபலங்கள்!

தமிழகத்தில் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அதிகளவில் புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படவுள்ளன. அதேபோல், வடமாவட்டங்களில் அதிகளவில் காலிப் பணியிடங்கள் உருவாவதால், வேறு மாவட்டங்களில் அதிகமாகவுள்ள ஆசிரியர்களை, வட மாவட்டங்களில் ஆசிரியர் பணிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பமும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரசுப் பள்ளிகளில் புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பணியாணையில் பணியில் சேரும் நாள் முதல் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது” என்று குறிப்பிட்டு பணியாணையை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங் பட வெற்றி விழா…. இயக்குனருக்கு பரிசளித்த ஹரிஷ் கல்யாண்…. என்னவென்று தெரியுமா?

பழைய நடைமுறைப்படி, புதியதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கலந்தாய்வின் மூலம் பணியிட மாறுதலைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ