spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமுதலமைச்சரை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண நிதி வழங்கிய அமீர்!

முதலமைச்சரை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண நிதி வழங்கிய அமீர்!

-

- Advertisement -

முதலமைச்சரை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண நிதி வழங்கிய அமீர்!பிரபல இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே, ராம் பருத்திவீரன் போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர். சமீப காலமாக அமீர் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே யோகி, வடசென்னை போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றார். தற்போது மாயவலை என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது . சமீபத்தில் இதன் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவியை முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார் அமீர். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் தனது சமூக வலைதள பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் அமீர் காசோலையை வழங்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “இயக்குனரும் நடிகருமான அமீர், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்” என்று தெரிவித்துள்ளது.

MUST READ