
தென் தமிழகத்தில் இன்றும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (டிச.19) ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்; பின்னர் மழை படிப்படியாகக் குறையும். குமரிக்கடல், அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நீடிக்கிறது. கேரளா, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் தரைக்காற்று 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
தொடர் கனமழை- அணைகள் வேகமாக நிரம்புகின்றன!
விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (டிச.18) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும். புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.