spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர் கனமழை- அணைகள் வேகமாக நிரம்புகின்றன!

தொடர் கனமழை- அணைகள் வேகமாக நிரம்புகின்றன!

-

- Advertisement -

 

தொடர் கனமழை- அணைகள் வேகமாக நிரம்புகின்றன!
Video Crop Image

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்புகின்றன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்துச் செல்வதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

we-r-hiring

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கன்னியாகுமரியில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் முழுமையாக நிரம்பி வருகின்றன. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதால் இடுக்கி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14 இடங்களில் அதீத கனமழை பதிவாகியுள்ளது. காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூரில் 67 செ.மீ. மழையும், ஸ்ரீவைகுண்டம் 62 செ.மீ. மழையும், கோவில்பட்டியில் 49.5 செ.மீ. மழையும், சாத்தான்குளம் 46.6 செ.மீ. மழையும், தூத்துக்குடியில் 36.1 செ.மீ. மழையும், ஒட்டப்பிடாரத்தில் 35.6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு!

திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

MUST READ