spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு!

தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு!

-

- Advertisement -

 

தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு!
Video Crop Image

நெல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் 45,000 கனஅடிக்கும் மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் ஆட்சியர் அலுவலகம் செல்லக் கூடிய மேலப்பாளையம் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!

தொடர் கனமழையால் மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மணிமுத்தாறு அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடிக்கும் அதிகமாக உள்ளது. தண்ணீர் திறப்பால் அம்பாசமுத்திரம், சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி, ஆரடியூர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 8 குழுவினர் அரக்கோணத்தில் இருந்து நெல்லை சென்றுள்ளனர். 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் அதிநவீன படகு மற்றும் மீட்பு உபகரணங்களுடன் நெல்லைக்கு சென்றுள்ளனர்.

திருநீற்றுப் பச்சிலையில் இவ்வளவு பயன்களா?

தொடர் கனமழையால் மதுரை- நெல்லை சாலையின் சாலைப்புதூர் சுங்கச்சாவடி அருகே 2 அடி உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. மதுரை- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கார், இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் நீந்தியபடி பயணிக்கின்றன.

MUST READ