Homeசெய்திகள்இந்தியாபாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு

-

- Advertisement -

பஞ்சாபில் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மயங்கி விழுந்த ஜலந்தர் காங். எம்.பி., சந்தோக் சிங் செளத்ரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

Congress MP Chaudhary Santokh Singh dies during Bharat Jodo Yatra - India  Today

we-r-hiring

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கினார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் மொத்தம் 150 நாட்களுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டு வருகிறார்.

வழக்கம்போல் இன்று காலை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தியுடன் பஞ்சாப் மாநில ஜலந்தர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோக் சிங் சௌத்ரியும் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கீழே விழுந்த அவரை காங்கிரஸ் தொண்டர்கள் பக்வாராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 76. பின்னர் சந்தோக் சிங் செளத்ரி உடல் ஜலந்தர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, காங்கிரஸ் குடும்பத்தின் வலுவான தூணாக இருந்தவர் சந்தோக் சிங் செளத்ரி என தெரிவித்துள்ளார்.

சவுத்ரிக்கு மரியாதை செலுத்தும் வகையில், பாரத் ஜடோ யாத்திரை 24 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஜலந்தரில் உள்ள கல்சா கல்லூரி மைதானத்தில் இருந்து நாளை மதியம் பாரத் ஜடோ மீண்டும் தொடங்கும்

MUST READ