Homeசெய்திகள்சினிமாடிமான்ட்டி காலனி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பூஜா ஹெக்டே!

டிமான்ட்டி காலனி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பூஜா ஹெக்டே!

-

- Advertisement -

டிமான்ட்டி காலனி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பூஜா ஹெக்டே!தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமுடி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து நெல்சன், விஜய் கூட்டணியில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பூஜா ஹெக்டே நடித்த பெரும்பாலான படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெற்று தரவில்லை.டிமான்ட்டி காலனி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பூஜா ஹெக்டே!

இந்நிலையில் பூஜா ஹெக்டே, டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா கொஞ்சம் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஏவிஎம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. தெலுங்கில் உருவாக இருக்கும் இந்த படமானது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் உருவாக இருக்கிறதாம். அதாவது அஜய் ஞானமுத்து நயன்தாரா நடிப்பில் இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தைப் போல இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பை விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டிமான்ட்டி காலனி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பூஜா ஹெக்டே!

we-r-hiring

அஜய் ஞானமுத்து அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில் டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

MUST READ