spot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கருவேலம்பட்டையின் சிறப்பு குணங்கள்!

கருவேலம்பட்டையின் சிறப்பு குணங்கள்!

-

- Advertisement -

கருவேலம்பட்டையின் சிறப்பு குணங்கள்!கருவேல் மூலிகையில் இருக்கும் கொழுந்து, இலை, வேர்ப்பட்டை, பிசின், மரப்பட்டை ஆகியவைகளும் மருத்துவ பயன் தரும் பாகங்களாகும். கருவேல் ஒரு கெட்டியான மரமாகும். இவை தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும் மலைகளிலும் வளரக்கூடியவை. இவற்றில் உள்ள மலர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இவை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பூக்கக்கூடியவை.

கருவேல் பிசின் காய்ச்சல், வாந்தி, மூலம், வயிற்றுக் கடுப்பு, இதய நோய், கிட்னி சம்பந்தமான நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும்.

we-r-hiring

கருவேல் மரத்தின் கொழுந்து சளி அகற்றி ஆக பயன்படுகிறது.கருவேல் இலைகளை அரைத்து புண்கள் இருக்கும் பகுதிகளில் தடவி கட்டிவர விரைவில் குணமடையும்.

துளிர் இலைகளை 5 கிராம் அளவில் எடுத்து அதனை நன்கு அரைத்த பின் மோரில் கலக்கி காலை மாலை என இரு வேளைகளில் குடித்து வந்தால் சீத கழிச்சல், வெப்பு கழிச்சல் ஆகியவை சரியாகும்.

கருவேலம்பட்டையினை அரைத்து பொடி செய்து வைத்து அதனை குடிநீரில் கலக்கி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் சரியாகும். மேலும் பல் ஆட்டம், பல் ஈறு அழுகல் போன்றவை குணமாகும்.கருவேலம்பட்டையின் சிறப்பு குணங்கள்!

கருவேலம் பிசினை நெய்யில் வறுத்து பொடியாக்கி இரண்டு கிராம் அளவில் காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வர இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை குணமடையும்.

இம்முறைகளை ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

MUST READ