‘ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிய ஜீவா அதன்பின் நடித்த ராம் திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகனாக நிலை நிறுத்திக் கொண்டார். ராம் படத்திற்காக “சைப்ரஸ் இன்டர்நேஷனல் விழா”வில் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு இந்த பன்னாட்டு விழாவில் விருது பெற்ற ஒரே நடிகர் ஜீவா தான் என்பது கூடுதல் செய்தி. அதைத்தொடர்ந்து ஈ, கற்றது தமிழ் என ஸ்ட்ராங்கான கன்டென்ட் உள்ள படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றார். பின்னர் இவர் நடித்த சிவா மனசுல சக்தி திரைப்படம் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஒரு கலகலப்பான ஹீரோவாக ஜீவாவை நம் கண் முன்னே நிறுத்தி இருந்தார் இயக்குனர் ராஜேஷ். இப்படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த கோ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம், நண்பன், என்றென்றும் புன்னகை, கலகலப்பு 2, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் சமீப காலமாக அவர் நடித்த படங்கள் முந்தைய படங்கள் அளவுக்கு மாபெரும் வெற்றியைப் பெறவில்லை.
எனவே ஒரு ஸ்ட்ராங்கான கம்பேக்கைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம் நடிகர் ஜீவா. இதற்காக அவர் ஒரு புது பிளான் போட்டுள்ளார். சாமி, காக்க காக்க போன்ற போலீஸ் கதை ஒன்றை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார் ஜீவா. மாஸான போலீஸ் அதிகாரி பற்றிய கதைகளுடன் பல இயக்குனர்கள் அவரை சந்தித்த போதும் எந்த கதையும் ஜீவாவை முழுமையாக திருப்தி படுத்தவில்லை. எனவே புதுப்புது கதைகளுக்காக நேரம் செலவிட்டு வருகிறார். கலகலப்பான கதாபாத்திரங்களை விடுத்து ஆக்சன் களத்தில் இறங்கவே இந்த முடிவை எடுத்துள்ளாரம் ஜீவா.
- Advertisement -