spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதயாராகும் 'பீட்சா 4'..... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தயாராகும் ‘பீட்சா 4’….. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

சில குறும்படங்களை இயக்கி அதன் மூலம் கற்ற அனுபவங்களையும் தன் திறமையையும் பயன்படுத்தி வெள்ளித்திரைக்காக படங்களை இயக்கத் தொடங்கியவர் கார்த்திக் சுப்பராஜ். இவருடைய முதல் படமான “பீட்சா” வெளியான போது வித்தியாசமான ஹாரர் படமாக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோருக்கும் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் கார்த்திக் சுப்பராஜ் அடுத்தடுத்து பல படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்று தற்போது ரஜினி, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்கி டாப் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் எழுதப்படாத சட்டம் ஒன்று உள்ளது. ஒரு படம் நன்றாக ஓடிவிட்டால் அப்படத்திற்கு பார்ட்-2 தொடங்கப்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இவற்றில் ஒரு சில படங்கள் பார்ட்-1 படங்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் தரமான பார்ட்-2 வாக உருவாகியுள்ளன. ஆனால் பல படங்கள் பார்ட்-1 படத்தின் கதைக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாமல் அந்த டைட்டிலை மட்டும் பயன்படுத்திக் கொண்டு தேவையில்லாத ஆணிகளாகவே வெளிவந்துள்ளன. தயாராகும் 'பீட்சா 4'..... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தற்போது, பீட்சா திரைப்படம் நல்ல ஹிட் அடித்து இருந்தாலும் அப்படத்தின் பெயரை மட்டும் பயன்படுத்திக் கொண்டு பீட்சா 2, பீட்சா 3 ஆகிய படங்கள் வெளிவந்தன. இப்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் இருந்தது. ஹாரர் என்ற ஒரே விஷயத்தை மட்டும் பொதுவாக வைத்துக் கொண்டு வெளியான இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இப்போது இந்த வரிசையில் பீட்சா-4 திரைப்படம் வரப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடாரம் கொண்டான் படத்தில் நடித்திருந்த அபி ஹாசன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.தயாராகும் 'பீட்சா 4'..... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு! சி.வி.குமார் இப்படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியானவுடன் வலைத்தளங்களில் ஆச்சரியத்துடன் சலசலப்பு பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ