Homeசெய்திகள்ஆவடிமக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் குறை தீர்ப்பு முகாம்!

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் குறை தீர்ப்பு முகாம்!

-

- Advertisement -

மக்களுடன் முதல்வர்  திட்டத்தின் கீழ்  மக்கள் குறை தீர்ப்பு முகாம் 03/01/2024  அன்று புதன்கிழமை ஆவடி மிட்டனமல்லி பகுதி சமுதாய  கூடத்தில்  2,3,4  வார்டு சார்பாக  நடைபெற உள்ளது. இந்த முகாமில்  மக்கள்  தங்கள் பகுதியில் உள்ள  அரசு துறைகள் சார்பான  குறைகளை தெரிவித்து தங்கள் பகுதியில்  நீண்ட நாட்களாக  தீர்க்கப்படாத   குறைகள்  மற்றும் அத்தியாவசிய தேவைகளை  மனுக்களாக கொடுத்து  தங்கள் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம்.

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் குறை தீர்ப்பு முகாம்!

we-r-hiring

இந்த முகாமில்  ஆவடி மாநகராட்சி ,  வருவாய்த்துறை, குடிநீர் மற்றும் வடிகால்துறை,    மின்சார துறை,  மற்றும் பல துறைகளின் அரசு அதிகாரிகள்   பங்கேற்க உள்ளனர். எனவே  இந்த வாய்ப்பினை  பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

MUST READ