
முடிச்சூரில் துப்பாக்கிச் சுடும் மையத்தில் குண்டு பாய்ந்ததில் சிறுவன் படுகாயமடைந்தார்.
“அமலாக்கத்துறை சம்மன்கள் பொய்யானவை”- முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
சென்னை தாம்பரம் முடிச்சூரில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் செங்கல்பட்டு ரைபிள் கிளப் துப்பாக்கிச் சூடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சிக்காக 13 வயது சிறுவன் தனது தந்தையுடன் சென்றுள்ளார்.
பின்னர், சிறுவன் துப்பாக்கிச் சூடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென ஏர்கன் வெடித்ததில் அலுமினிய குண்டு, சிறுவனின் தோள்பட்டையில் பாய்ந்தது. வழியில் துடித்த சிறுவனை அவரது தந்தை மீட்டு, உடனடியாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
“அதானி குழுமக் குற்றச்சாட்டை செபி அமைப்பே விசாரிக்கும்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
சம்பவம் தொடர்பாக, முடிச்சூர் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.