spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும், எச்சரிக்கையும்!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும், எச்சரிக்கையும்!

-

- Advertisement -

 

we-r-hiring

வரும் ஜனவரி 09- ஆம் தேதி பணிக்கு வரவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக 50வது நாள்….. பிரபல திரையரங்கத்தில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ கொண்டாட்டம்!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஜனவரி 09- ஆம் தேதி மற்றும் அதற்கு பின்னர் வழங்கப்பட்ட விடுப்புகள் யாவும் ரத்துச் செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாரவிடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும், கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுளள்து.

ஜனவரி 09- ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது நிலையாணை விதிகளின் படி, சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.

வரும் ஜனவரி 09- ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், இரண்டு கட்டமாக அமைச்சர், அதிகாரிகளுடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

கருணாநிதி- தமிழ்- சினிமா – அரசியல் பிரிக்கவே முடியாதவை…. கலைஞரின் நினைவலைகளை பகிர்ந்த கமல்!

தொடர்ந்து தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அரசு அறிவித்தப் போதும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ