Homeசெய்திகள்சினிமாமெரி கிறிஸ்துமஸ் படத்தின் புதிய பாடல் வெளியீடு

மெரி கிறிஸ்துமஸ் படத்தின் புதிய பாடல் வெளியீடு

-

- Advertisement -
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

மக்கள் செல்வன் என கோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழில் வெற்றிக்கொடி நாட்டிய அவர் அடுத்து மலையாளம், தெலுங்கு, மற்றும் இந்தி என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி பல படங்களில் முகம் தெரியாத அளவு கூட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது தமிழில் ஹீரோவாக மட்டுமன்றி வில்லனாகவும் கலக்கி வருகிறார். இறுதியாக ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டி எடுத்தார்.

பாலிவுட்டில் மும்பை கர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் இதுவாகும். இருப்பினும் அப்படம் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை. தற்போது பிரபல இந்தி இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார். மேலும், ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும், பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படம் வரும் ஜனவரி 12-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்திலிருந்து ஏற்கனவே பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்திலிருந்து புதிய பாடல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ