Homeசெய்திகள்இந்தியாராமரின் பட்டாபிஷேகத்தைக் காண விழாக்கோலம் பூண்ட அயோத்தி!

ராமரின் பட்டாபிஷேகத்தைக் காண விழாக்கோலம் பூண்ட அயோத்தி!

-

- Advertisement -

 

அயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேகத்தைக் காண நாடு முழுவதிலும் உள்ள ராமர் பக்தர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆரோக்கியமான கல்யாண முருங்கை அடை செய்யலாம் வாங்க!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல மாநிலங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், ஆனாலும் இந்தியா என்ற தேசம் வழிபாட்டில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் என்ன வழிபாடோ? அதே வழிபாடு தான் இங்கே மன்னார்குடியில் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயிலிலும் நடைபெறுகிறது.

பல்வேறு வேற்றுமைகள் கொண்ட இந்தியாவை ஒன்றிணைக்கும் மற்றொரு விஷயமும் இருக்கிறது. அது இருபெரும் காப்பியங்கள். அதில் ஒன்று தான் ராமாயணம். ராமனாக சில நிமிடம் வேடமிட்ட ராவணன் கூட, மனதில் தீங்கு இல்லாமல், சக மனிதர்களிடம் அன்பு காட்டியதாகச் சொல்கிறது ராமாயணம். வடமொழியில் ராமாயணத்தை வால்மீகு எழுதினாலும், இங்கே தென்னகத்தில் ராமனை நினைத்து உருக காரணமானவர்களில் ஒருவர் கம்பர்.

அவரின் கவித்திறனும், ராமனின் பற்றி அவரின் சொல்லாடலும் இன்றும் இலக்கிய தேனாக, சுவை மாறாமல் இருக்கிறது. ராமர் வாழ்ந்தது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. ஆயினும் இன்றும் பாரதம் முழுவதும் அவரது சுவடுகள் பதிந்திருப்பதாக நம்பப்படுகிறது. சீதையை மீட்க ராமர் அமைத்ததே சேது பாலம் என்ற கருத்தும் நிலவுகிறது.

தாய்ப்பால் அதிகம் சுரக்க இதை பின்பற்றுங்கள்?

தென்னிந்தியாவிலேயே ராமர் வாழ்ந்ததற்கான சான்றுகள் நிறைய கிடைத்திருப்பதாகக் கருதப்படும் சூழலில், அவர் பிறந்த அயோத்தியை சொல்லவே வேண்டாம். அதில் ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் 500 ஆண்டுகள் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. மீண்டும் ராமரின் பட்டாபிஷேகத்தைக் காண விழாக்கோலம் பூண்டுள்ளது அயோத்தி.

MUST READ