spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் பச்சடி செய்யலாம் வாங்க!

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் பச்சடி செய்யலாம் வாங்க!

-

- Advertisement -

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் பச்சடி செய்யலாம் வாங்க.

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் பச்சடி செய்யலாம் வாங்க!நெல்லிக்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் – 250 கிராம்
இஞ்சி – ஒரு துண்டு
தேங்காய் – அரை மூடி
பச்சை மிளகாய் – 3
தயிர் – அரை தேக்கரண்டி
கடுகு – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

we-r-hiring

செய்முறை:

நெல்லிக்காய் பச்சடி செய்ய முதலில் நெல்லிக்காய்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் இஞ்சியையும் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது நெல்லிக்காய், இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் தயிர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் பச்சடி செய்யலாம் வாங்க!

அவ்வளவுதாங்க வெறும் பத்து நிமிடத்திலேயே நெல்லிக்காய் பச்சடி தயாராகிவிட்டது. நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை சாப்பிடலாம். நெல்லிக்காய்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்க செய்கிறது.

MUST READ