spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி'.... ரிலீஸ் எப்போது தெரியுமா?

ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’…. ரிலீஸ் எப்போது தெரியுமா?

-

- Advertisement -

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி'....  ரிலீஸ் எப்போது தெரியுமா?ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் ப்ரதர், சைரன், ஜன கன மன, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ஜீனி படத்திலும் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை மிஷ்கினின் உதவி இயக்குனர் அர்ஜுனன் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி'....  ரிலீஸ் எப்போது தெரியுமா? ஃபேண்டஸி கதை களத்தில் உருவாகி வரும் ஜீனி படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளனர். இன்னும் சில விடுபட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. விரைவில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விடும் என்று கூறப்படுகிறது.

we-r-hiring

அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவியின் ஜீனி படத்தை, 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ