spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"சிலைகளைக் கரைக்க கட்டணம் நிர்ணயம்"- தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

“சிலைகளைக் கரைக்க கட்டணம் நிர்ணயம்”- தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

-

- Advertisement -

 

ஆந்திர அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்!
File Photo

“விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளைக் கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்” என தமிழக சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் தலைமையிலான குழுவுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

அக்கா பவதாரிணி மறைவு… இலங்கை புறப்பட்டார் யுவன்சங்கர் ராஜா…

நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்கக்கோரி, சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர், தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுவைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தீர்ப்பாயம் சிலைகளைக் கரைப்பதால் நீர்நிலைகள் மாசடைவது மட்டுமல்லாமல், சிலைகளின் கரையாதப் பாகங்கள் எடுக்கப்படுவதாகவும், அவற்றை சுத்தப்படுத்த வேண்டிய சுமை அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஏற்படுவதாகவும் தெரிவித்தது.

அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகள் கரைக்கப்பட்டால், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் அதிகாரிகள் இருப்பதாகவும் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தியின் போது, சிலைகளைக் கரைப்பதற்கு அனுமதி வழங்கக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் செயலாளர் தலைமையிலான குழுவிற்கு உத்தரவிட்ட தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம், அந்த கட்டணத்தை அறிவிக்கப்பட்ட நீர்நிலைகள் பராமரிப்பிற்கு செலவிட அறிவுறுத்தியது.

கருடன் படத்தின் டப்பிங் தொடக்கம்… கையில் கட்டுடன் பேசும் சூரி…

அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளைக் கரைத்தால் விதிக்கப்படும் அபராதம் குறித்து விளம்பரப்படுத்தவும் உத்தரவிட்ட தீர்ப்பாயம் வழக்கை முடித்து வைத்தது.

MUST READ