ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுபாஸ்கரன் தயாரிக்க இசை புயல் ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினி படத்தில் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களம் என்பதால் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் இதில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவை தொடர்ந்து பேசிய ரஜினி, “காக்கா கழுகு கதையில் நான் விஜயை குறிப்பிட்டது போல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. அது எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது. என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த பையன் விஜய். தர்மத்தின் தலைவன் ஷூட்டிங்கில் நான் இருக்கும் போது விஜய்க்கு 13 லிருந்து 14 வயது இருக்கும். அப்போது சந்திரசேகர் இது என் பையன் என்று என்னிடம் அறிமுகப்படுத்தி இவருக்கு நடிப்பில் ஆர்வம் இருக்கிறது என்று சொன்னார். அதன் பின் விஜய் நடிக்க வந்து படிப்படியாக தனது திறமையினாலும் உழைப்பினாலும் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இந்நிலையில் எனக்கு விஜய் போட்டு என சொல்வது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. அவரே சொன்னது மாதிரி அவர் படத்துக்கு அவர் தான் போட்டி. விஜய் எனக்கு போட்டின்னு நினைச்சா அது எனக்கு மரியாதை இல்லை எனக்கு விஜய் எனக்கு போட்டின்னு நினைச்சா அது எனக்கு மரியாதையும் இல்லை கௌரவமும் இல்லை. விஜய் என்ன போட்டின்னு நினைச்சா அது விஜய்க்கு மரியாதை இல்லை. எங்கள் இருவரின் ரசிகர்கள் இந்த விவாதத்தை முற்றிலும் தவிர்த்திடுங்கள். என்னுடைய அன்பான வேண்டுகோள்” என்று பேசி காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
- Advertisement -