டி ராஜேந்தர், விஜயின் அரசியல் என்ட்ரி குறித்து பேசியுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாக தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். எனவே விஜய், தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கப் போகிறார் என்று பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் நேற்றைய முன் தினம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில், தான் போட்டியிடவில்லை எனவும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்தார்.
அதே சமயம் தான் அடுத்ததாக கமிட் ஆகியுள்ள புதிய படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறப்போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பல அரசியல் பிரமுகர்களும் திரை பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும், விஜயின் அரசியல் வருகையை வரவேற்றும் வருகின்றனர். அந்த வகையில் டி ராஜேந்தர், “அரசியல் என்பது பொது வழி. யார் வேண்டுமானாலும் இதில் பயணிக்கலாம். எனவே யார் வேண்டாமானாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கலாம். விஜயை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. நம் நாட்டு மக்களுக்கு வேண்டியது விமோச்சனம் என்று தன்னுடைய ஸ்டைலில் விஜயின் அரசியல் வருகை குறித்து பேசி இருக்கிறார்.