கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி‘ எனும் திரைப்படம் கடந்த மே 5ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் அடா ஷர்மா, யோஹிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சன் சைன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. வீரேஷ் ஶ்ரீ வல்ஸா இதற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வௌியான நாள் முதலே பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பல நாடுகளில் இப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது.
இந்த படத்தில், 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.இது போன்ற கதையினால் இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்தே இப்படம் சர்ச்சைக்குள்ளானது. இதனால் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட நாடுகளில் இந்தப் படத்திற்கு பல்வேறு விதமான எதிர்ப்புகள் கிளம்பியது.அதன்பின் பல போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி ரூ.240 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
ஆனால், படத்தை வௌியிட எந்த ஓடிடி நிறுவனங்களும் முன்வரவில்லை. இந்நிலையில், ஜீ 5 ஓடிடி தளத்தில் படம் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் 16-ம் தேதி வெளியாகிறது.