நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாகவும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து நடிகர் விஷாலும் அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் விஷால் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், தான் தொடர்ந்து மக்கள் சேவை செய்து வருவதாகவும் வரும் காலத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக குரல் கொடுப்பேன் எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், “அரசியல் என்பது பொதுப்பணி, சமூக சேவை. சினிமா போல் அரசியல் கிடையாது. பொழுதுபோக்கிற்காக வந்து போகும் இடம் கிடையாது. மக்களின் தேவைகளை செய்வதே அரசியல். அதே சமயம் நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளராவேன் என்று நினைத்தது இல்லை. ராதாரவிக்கு போட்டியாக நிற்பேன் என்று நினைத்ததில்லை. எல்லாம் அந்த காலகட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவு தான். எனவே அதற்கான நேரத்தில் முடிவு செய்யப்படும். இந்த கேள்வியை அப்பொழுது
கேட்டால் சரியான பதில் கிடைக்கும்” என்று பேட்டியளித்துள்ளார்.


