spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு... 96 படம் மறுவெளியீடு...

கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…

-

- Advertisement -
காதலர் தினத்தை கொண்டாடும் வகையில், அன்றைய தினம் 96 திரைப்படம் மறு வெளியீடு செய்யப்படுகிறது.

சினிமாவில் ஹிட் அடித்த பழையா கிளாஸ் திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வது தற்போது டிரெண்டாகி வருகிறது. நல்ல திரைப்படங்கள் மீண்டும் வெளியீடு செய்யப்படும்போதும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அண்மையில் சூர்யாவின் வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளியானது. அதே போல, மயக்கம் என்ன, 7ஜி ரெயின்போ காலனி, ஆகிய திரைப்படங்களும் தமிழகத்திலும், தெலுங்கு தேசத்திலும் ரி ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

we-r-hiring
அந்த வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஹிட் அடித்த காதல் திரைப்படங்கள் மீண்டும் திரையிடப்படுகின்றன. மலையாளத்தில் வௌியாகி இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த பிரேமம் திரைப்படம் காதலர் தினமன்று வெளியாகிறது. அதேபோல தற்போது தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித் 96 திரைப்படமும் ரி ரிலீஸ் ஆகிறது. பிரேம் குமார் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, கௌரி கிஷன், வர்ஷா பொல்லமா, தேவதர்ஷினி ஆகியோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் மட்டுமன்றி படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தன. ராம் மற்றும் ஜானு இரண்டு கதாபாத்திரங்களும் கோலிவுட்டின் அடையாளங்களில் ஒன்றாக இடம்பெற்றன. இந்நிலையில், மீண்டும் வெளியாக உள்ள 96 திரைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

MUST READ