சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கனிகா. இவர் தமிழில் ஃபைவ் ஸ்டார், எதிரி, வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜய் நடிப்பில் உருவாகி வரும் The Greatest Of All Time படத்திலும் விஜய் சேதுபதியின் டிரெயின் படத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் கனிகா.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசிய கனிகா, “பெண்களின் மார்பகம் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எதற்காக இது மாதிரி செய்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. திருமணமாகி கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஹார்மோன்கள் மாற்றத்தால் மார்பகம் இப்படி தான் இருக்கும். எனக்கும் அது போன்று தான் இருக்கிறது. இதனை மோசமான வார்த்தைகளால் கமெண்ட் செய்பவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று யோசிக்க தோன்றுகிறது. அதுபோல குழந்தை பிறந்த பிறகும் கவர்ச்சி ஆடை தேவையா என்று கேட்கிறார்கள். எனக்கு பிடித்த ஆடையை நான் சுதந்திரமாக அணிகிறேன். இதை எப்படி பார்க்க வேண்டும் என்பதில் வரைமுறை இருக்கிறது. இதை என் மகனுக்கு நான் கற்றுக் கொடுத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -