spot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து விபத்து - 25 மாணவர்கள் படுகாயம்

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து விபத்து – 25 மாணவர்கள் படுகாயம்

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி அருகே ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. அதில் பள்ளி மாணவ மாணவிகள் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

we-r-hiring

கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி பேருந்து 40 மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஏரவார் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் பொற்படாக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகேயுள்ள விவசாய நிலத்தில் ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.

அதனால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

MUST READ