Homeசெய்திகள்மாவட்டம்விழுப்புரம் அருகே பயங்கரம்: சுற்றுலா வேன் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து...

விழுப்புரம் அருகே பயங்கரம்: சுற்றுலா வேன் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 10 குழந்தைகள் உட்பட 25 பேர் படுகாயம்! ​

-

- Advertisement -

விழுப்புரம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.விழுப்புரம் அருகே பயங்கரம்: சுற்றுலா வேன் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 10 குழந்தைகள் உட்பட 25 பேர் படுகாயம்!  ​​சென்னை ஈச்சங்காடு பகுதியிலிருந்து திருச்சி மார்க்கமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் விழுப்புரம் அருகே பேரங்கியூர் மற்றும் பைத்தாம்பாடி கூட்ரோடு சந்திப்பு பகுதியில் வந்தபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. ​சாலையின் நடுவே இருந்த மையத் தடுப்பை (Divider) உடைத்துக் கொண்டு பாய்ந்த அரசுப் பேருந்து, எதிர் திசையில் வந்த சுற்றுலா வேன் மீது கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. ​இந்த அதிவேக மோதலில் வேனின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது. இதனால் வேனில் பயணம் செய்த உஷா, ருத்ரகோட்டி, சரவணகுமார், கோமதி, தமிழ்ச்செல்வன், கௌதமன், கனகவள்ளி, கார்த்தி, சுகன்யா உள்ளிட்ட 8 பெண்கள், 10 குழந்தைகள் என 25-க்கும் மேற்பட்ட பயணிகள் வாகனத்திற்குள் சிக்கி அலறினர். ​

விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்களும், சக வாகன ஓட்டிகளும் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். ​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் விரைந்து வந்தனர். பொதுமக்களின் உதவியோடு வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர். விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தைகள் உட்பட அனைத்துப் பயணிகளும் அவசர சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூரில் முதல்வர் விஜய் பயன்படுத்திய தவெக பிரச்சாரப் பேருந்து: 41 பேர் பலியான கொடூர விபத்தின் சாட்சியை மீண்டும் கொண்டு வந்ததா? – பொதுமக்கள் வேதனை!

we-r-hiring

MUST READ